Blogger இயக்குவது.

செவ்வாய், 13 ஜனவரி, 2015

கரண்டி ஆம்லெட்

வழக்கமான ஆம்லெட் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும் முட்டைப் பிரியர்களுக்கு இது நல்ல மாற்று. செய்வது சுலபம், சுவையோ அதிகம்.

என்னென்ன தேவை?

முட்டை-1

சின்ன வெங்காயம் - கைப்பிடி

கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகுத் தூள் - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் ஒரு குழிக் கரண்டியில் சிறிதளவு எண்ணெய் தடவி அதில், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.

பிறகு மிளகுத் தூள் தூவி, கலக்கி வைத்திருக்கும் முட்டையை ஊற்றவும். சிறிது நேரத்தில் திருப்பிப் போட்டு எடுக்கவும். ஓட்டல்களில் ஒவ்வொருவருக்கும் இதுபோன்று செய்துகொடுக்க நேரமாகும் என்பதால், தற்போது தோசைக் கல்லிலேயே குழிகள் அமைக்கப்பட்டு அதிலேயே கரண்டி ஆம்லெட் சுடச்சுடத் தயார் செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக