கொளுத்துகிற கோடையில் ஜில்லென ஐஸ்க்ரீம் சாப்பிடுவது சுகமான அனுபவம் என்றால் கொட்டுகிற மழையில் குளிரக் குளிர ஐஸ்க்ரீம் ருசிப்பது அதைவிட அருமையான அனுபவம்.கடைகளில் வாங்கி சாப்பிடுகிற ஐஸ்க்ரீம் வகைகளில் செயற்கையான எசென்ஸும், கலரும், சுவையும் சேர்க்கப்படுவதால் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமில்லை. ‘‘வீட்லேயே விதம் விதமான பழங்களைக் கொண்டு ஐஸ்க்ரீம் செய்யறது மூலமா ஆரோக்கியத்தையும் காப்பாத்தலாம்... பழங்கள் சாப்பிடற பழக்கத்தையும் உருவாக்கலாம்’’ என்கிறார் ஹேமலதா!
‘‘எம்.பி.ஏ. முடிச்சிருக்கேன். ஆரோக்கியமான சாப்பாடு பத்தின அக்கறை காலேஜ் படிக்கிற போதே உண்டு. பேக்கரி அயிட்டங்களை கூட வீட்லயே ஆரோக்கியமா எப்படிச் செய்யறதுனு யோசிச்சுப் பண்ணுவேன். அப்படித்தான் ஐஸ்க்ரீம் செய்யக் கத்துக்கிட்டேன். எசென்ஸ் உபயோகிச்சுப் பண்றதுக்குப் பதிலா பழங்களையே வச்சு ட்ரை பண்ணினேன். ஸ்ட்ராபெர்ரி, மேங்கோ, பனானானு எல்லாப் பழங்களையும் வச்சு ஐஸ்க்ரீம் பண்ணலாம். குல்ஃபியும் பண்றேன். பிளெயின், கேசர் - பாதாம், மேங்கோ, சாக்லெட், மலாய்னு அஞ்சு ஃபிளேவர்ல குல்ஃபி பண்றேன்.
இது தவிர, சமீப காலமா சிறுதானியங்களைப் பத்தின விழிப்புணர்வு அதிகமாயிட்டு வர்றதால, அதை வச்சும் ஐஸ்க்ரீம் பண்ணினா என்னனு யோசிச்சு ட்ரை பண்ணினேன். சர்க்கரைக்குப் பதில் வெல்லம், பாலுக்கு பதில் தேங்காய்ப் பால், கோவா, கார்ன்ஃப்ளாருக்கு பதில் பனிவரகு, திணை மாவு வச்சு செய்து பார்த்ததுல சூப்பரா வந்தது. ஐஸ்க்ரீம் சாப்பிட்டா உடம்புக்கு ஆகாதுங்கிறதை மாத்தி, அதையுமே ஒரு ஆரோக்கிய உணவா கொடுக்கிறதுதான் என் நோக்கம்’’ என்கிற ஹேமலதா, 2 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஐஸ்க்ரீம் பிசினஸில் இறங்க நம்பிக்கை தருகிறார்.
‘‘பால், பழங்கள், ஃப்ரெஷ் க்ரீம், சிறுதானியங்கள், எலெக்ட்ரிக் பிளென்டர், மோல்டுனு எல்லாத்துக்கும் சேர்த்தே அந்த முதலீடு போதும். எலெக்ட்ரிக் பிளென்டர் 1,750 ரூபாய்க்குக் கிடைக்கும். கையாலயே ஐஸ்க்ரீம் கலவையைக் கலக்கலாம். பிளென்டர் உபயோகிச்சா இன்னும் அதிக சாஃப்டா வரும். அதே பிளென்டரை கேக் தயாரிக்க, மாவு கரைக்கவெல்லாம் கூட உபயோகிக்கலாம். வெனிலா, பட்டர் ஸ்காட்ச் வகைகளை 500 மி.லி. 50 முதல் 75 ரூபாய்க்கும், குல்ஃபி வெரைட்டியை அளவு மற்றும் ஃபிளேவரை பொறுத்து 10 ரூபாய்லேருந்தும் விற்கலாம்.
50 சதவிகித லாபம் நிச்சயம். வெயில் காலத்துல விற்பனை அதிகமா இருக்கும். மற்ற நாட்கள்லயும் விசேஷங்களுக்கு ஆர்டர் எடுக்கிறது மூலமா லாபம் பார்க்கலாம்...’’ என்கிறவரிடம் ஒரே நாள் பயிற்சியில் 5 வகையான ஐஸ்க்ரீம் மற்றும் 4 வித குல்ஃபி செய்யக் கற்றுக் கொள்ளக் கட்டணம் 750 ரூபாய். (95001 48840)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக