Blogger இயக்குவது.

புதன், 21 ஜனவரி, 2015

பட்டுச் சேலை பராமரிப்பு

1.      விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுச் சேலையை தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேங்களுக்கு சென்று  வந்தவுடன் பட்டு சேலையை களைந்து உடனே மடித்து வைக்ககூடாது.
2.      நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம் உலர விட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.
3.      எக்காரணம் கொண்டும் பட்டுச்சேலையை சூரிய ஒளியில் வைக்கக்கூடாது, சோப்போ அல்லது சோப் பவுடரோ உபயோகித்து துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீர் விட்டு அலசினாலே போதுமானது.
4.      ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியை தடவி 5,10 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர் விட்டு அலச வேண்டு.
5.      பட்டுப்புடவைகளை வருடக்கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலர விட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும்.
6.      அயர்ன் செய்யும் போது ஜரிகையைத் திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்ய கூடாது.
7.      பட்டுச் சேலையை கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டை பையில் வைக்காமல் துணி பையில் வைக்கலாம்.

பொருத்தமான மேக்கப்


கூந்தல்:

* பெண்ணோ, ஆணோ யாராக இருந்தாலும் தோற்றத்தை மேம்படுத்தும் சிறப்பு கூந்தலுக்கு உண்டு. ஆனால் பராமரிப்பது சிரமமான வேலை. போதிய நேரம் ஒதுக்க முடியாது பலருக்கு. இதனால், நீண்ட அடர்ந்த கூந்தலைக் கூட குட்டையாக வெட்டிக் கொள்ளும் பெண்கள் அதிகம்.

* முடி சின்னதாக இருக்கே என்று கவலைப்படாமல் நம் முடி எப்படியோ அதற்கேற்ப விதவிதமாக கூந்தலை அலங்காரம் செய்துகு கொள்ளலாம். முடி நீண்டு அடர்த்தியாக இருந்தால் எந்த மாதிரியான சிகை அலங்காரமும் அழகாகத்தான் இருக்கும். இருந்தாலும் கண் அமைப்பு, முக வடிவத்தை பொருத்து உங்களுக்கு பொருந்துவிதமாக கொண்டை, பின்னல்களை போட்டுக்கொள்ளுங்கள்.

குட்டை முடி:

* உருண்டை முகம்: கோணல் வகிடு எடுக்காமல் தூக்கிவாரி கொள்ளலாம்.நடு வகிடு எடுத்து பின்னல் போட்டுக் கொள்ளலாம்.

* நீளமுகம்: ஒரு பக்கம் கோணல் வகிடு எடுத்து, இரு பக்கம் வாரிவிட்டால் முகம் சற்று அகலமாக காட்டும். * அகலமான முகம்: முடியை பின்புறம் எடுத்து காதை மறைக்கும் அளவுக்கு வாரலாம். முகம் உருண்டையாக தெரியும்.

* அகலமான நெற்றி: முன்பக்க முடியை சற்று எடுத்து ஃப்ரிஞ்ச் எனப்படும் ஹேர்கட் பண்ணலாம். நெற்றி முடி முன்னால் வருமாறு கட் பண்ணலாம்.

* குட்டை கழுத்து: குதிரைவால் கொண்டை பொருத்தும்.

* தாடை நீண்ட ஓவல் வடிவ முகம்: முடியை நோக்கி “சி” வடிவமான வகிட்டிலிருந்து தாடை வரை வந்து விழுவதுபோல் அமையுங்கள் அழகாக, வித்தியாசமாக இருக்கும்.

நீளமான முடி:

* பின்னல், கொண்டை இரண்டும் கச்சிதமாக அமையும்.

* ஃப்ரென்ச் ப்ளெய்ட் போடலாம். ஆனால் முடி திக்காக, முகம் ரவுண்டாக இருக்கவேண்டும்.

* முடியை தூக்கிவாரி கொண்டையின் மேல் ஃப்ரென்ச் நாட் போடலாம். கழுத்து குட்டையாக இருப்பவர்கள் போட்டாலும் அழகுதான்.

* நீளக்கழுத்து: காது லெவலுக்கு மேல் கொண்டை போடக்கூடாது.

* மீடியம் கழுத்து: பின் கொண்டை போட்டால் ஆபரணங்கள் எடுப்பாக தெரியும். கழத்தை ஒட்டி வகிடெடுத்து சற்று இறக்கி கொண்டை போடலாம். ரொம்ப இறக்கி விடாதீர்கள்.

* மிக நீண்ட கழுத்து: கழுத்தை ஒட்டினர்போல் சற்று முதுகையும் மறைக்கும் அளவுக்கு ரோல்ஸ் போண்ட கொண்டைகள் போடலாம். கழுத்தை மூடும்படியாக பூ வைத்துக் கொள்ளலாம்.

* உருண்டைமுகம்: உயரமான கொண்டை மிகவும் அழகாக இருக்கும்.

* ஓவல் முகம்: காதை மூடினமாதிரியான கொண்டை கழுத்தின் ஆரம்பம் வரை இருக்கட்டும். முன்னால் பார்த்தால் தெரியுமாறு பூ சூடிக்கொண்டால் முகம் உருண்டையாக தெரியும்.

* சதுர முகம்: தளர ( காதை மூடிய பின்னல் ) , கொண்டை போடலாம். காதோர முடியை சுருட்டி தொங்கவிட மேலும் அழகாக இருக்கும். * குண்டானவர்கள்: கொண்டை வேண்டாம். பின்னல் நல்லது.

* உயரமானவர்கள்: கொண்டை வேண்டாம், ஆசையாக இருந்தால் சற்று தழைத்து போட்டுக் கொள்ளவும்.

* குள்ளமானவர்கள்: சற்று உயர தூக்கி கொண்டை போடுங்கள்.

* எல்லோருமே கொண்டைவலையில் ஜம்கி, சலங்கை, மணிகளை( ஓவராக அல்ல ) ஒட்டி வைத்துக்கொண்டால் விஷேங்களுக்கு செல்லும் போது உங்களை ரிச்சாக காட்டும். பாராட்டு கிடைக்கும்.

பொட்டு:

* உடைக்கேற்ற டிசைன் பொட்டு தே நிறத்திவ் தேர்ந்தெடுங்கள். பொதுவாக மெரூன் பொட்டு எல்லா உடைகளுக்கும் பொருந்தும்.

* உருண்டை முகம்: வட்டம், உயரம் என எல்லா பொட்டும் பொருந்தும். சிறிய நீட்டப் பொட்டு சூப்பராக இருக்கும்.

* குறுகிய நெற்றி: சிறிய டிசைன் பொட்டுகள் பொருந்தும்.

* நீளமுகம்: கலர் சாந்தினால் அகல டிசைன் வரைந்து கொள்ளலாம்.

* சதுர முகம், பரந்த நெற்றி: நீள டிசைன் பொட்டுகள் வைக்கலாம்.

* ஜீன்ஸ் அணிந்தால் கூட பாம்பு போன்ற வளைந்த, நீள டிசைன் பொட்டுகள் எடுப்பாக இருக்கும்.

பெண்கள் தங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற சிறிய ரோமங்களை நீக்க பெண்கள் தங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற சிறிய ரோமங்களை நீக்கினால் முக அழகு கூடும். அதற்கான அசத்தல் ஐடியா,

இதோ! முட்டையின் வெள்ளைக் கரு, சர்க்கரை, சோளமாவு மூன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். மூன்றையும் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். கிடைக்கும் கலவையை முகத்தில் ரோமங்கள் இருக்கும் இடத்தில் பூசிக்கொள்ள வேண்டும். கலவை காய்ந்தபின் அதனை பதமாக நீக்க வேண்டும். அப்போது கலவையுடன் சேர்ந்து ரோமங்களும் உதிர்ந்துவிடும். தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை இப்படியே செய்துவந்தால் ரோமங்கள் இல்லாமல் சவழவழ முக அமைப்பை பெறலாம். நகத்துக்குச் சாயம்

நகங்களை நீளமாக வளர்ப்பதுதான் இன்றைய நாகரிகம் என்ற கருத்து பலரிடையே நிலவுகிறது. விரலின் விளிம்புக்கும் அதிகமாக நகங்களை வளரவிடுவது அவ்வளவு நல்லதல்ல. சாதாரணமாண எந்தவித வேலைக்கும் நீளமான நகங்கள் இடைஞ்சலாகவே இருக்கும். மேலும் அது பிய்ந்தும் உடைந்தும் தொல்லை தரும். நடுவில் பிரிந்து அல்லது அரைகுரையாக உடைந்து மூளியாகக் காட்சியளிக்கும் நகம் விரலின் அழகையே கெடுத்துவிடும்.

எனவே அதிகமாக நகம் வளர்க்காதீர்கள். நகம் வெட்டியை பயன்படுத்தி குறிப்பிட்ட தினங்களுக்கு ஒருமுறை வெட்டிவிடுங்கள். நகத்தை நீக்குவதற்கு பல்லால் கடிப்பதை தவிர்க்கவும். அது அசிங்கமான பழக்கம் என்பதை விட தேக நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.

நகங்களுக்கு சாயம் பூசி அழகுபடுத்துவது தொன்று தொட்டு வரும் பழக்கமாகும். சாதாரணமாக நாம் இதற்கு மருதாணி இலைகளையே பயன்படுத்துகிறோம்.

மருதாணி அரைக்கும் போது நன்கு வெண்ணெய் போல் அரைப்பது சிறந்ததாகும்.
அப்போது அது நகங்களில் நன்றாக பற்றும். மருதாணி இலையை அரைக்கும் போது சிறிதளவு களிப்பாக்கை சேர்த்து அரைப்பது சாயம் நன்கு ஏற உதவும்.

விரல்களை நன்கு சுத்தம் செய்த பின்னரே அவற்றிற்கு அழகு செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

இது நகத்தில் சிவப்பு நன்கு ஏற உதவுவதோடு மருதாணி கலையாமல் இருக்க பயன்படும்.

நகங்களுக்குப் பூசிய பின்னர், உள்ளங்கைகளில் அழகிய வேலைபாடுகள் அடங்கிய, கவர்ச்சி பொருந்திய “டிசைன்களை” மருதாணியைக் கொண்டு இடலாம்.

உள்ளங்கை அளவே உள்ள அட்டைகளை எடுத்துக் கொள்ளவும். அதில் அழகான டிசைன்களை வரைந்து, நடுவில் வெட்டி எடுக்கவும்.

பின், டிசைன்கள் வெட்டப்பட்ட அட்டையை உள்ளங்கையில் வைத்து, அதன்மீது மருதாணி விழுதை நன்கு பரப்பி அதன் இலையை வைத்து கட்டிடவும்.

மறுநாள் மருதாணியை எடுத்துவிடும் போது கைகளில் அழகான டிசைன்கள் அமைந்து விடும். உள்ளங்கைகளைச் சுற்றிப் பொட்டுகள் வைப்பதும் உண்டு.

மருதாணியைத் தவிர, பலரகச் செயற்கைப் பூச்சுகளைப் பலர் உபயோகிப்பதுண்டு. சிவப்பில் பல ரகங்களில் இது கிடைக்கும் இயற்கை நிறத்திலும் உண்டு. இயற்கை நிற பூச்சு நகத்திற்கு தனி நிறம் கெடாது. ஒருவித பளபளப்பை மட்டும் உண்டு பண்ணி மெருகேற்றி விடுகிறது.

பொதுவாக இவ்வகை இயற்கை நிறப்பூச்சைப் பயன்படுத்தி நகங்களுக்கு பொலிவுபண்ணுவது ஆடம்பரமற்ற அமைதியான அழகை தரும்.

ஒவ்வொரு தடவையும் நகப்பூச்சை பயன்படுத்தும் போதும் பழைய பூச்சை அகற்றிவிடுவது மிகமிக அவசியம். காய்ந்த பழைய பூச்சை எடுத்துவிட கத்தியைக் கொண்டோ அல்லது வேறு ஏதும் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தியோ நகத்தை சுரண்டுவது நல்லதல்ல.

அதற்குறிய “பாலிஸ் ரிமூவரையே” பயன்படுத்த வேண்டும். பழைய பூச்சைக் களைந்து விரல்களை நன்கு சுத்தப்படுத்திப் பின்னர் திரும்பவும் பூசவும்.

கைகளுக்கு பயன்படும் இந்த பூச்சுகளே பாதங்களுக்கும் பயன்படக்கூடியவை.

அழகுக்கு அழகு சேர்க்கும் ஆடை அலங்காரம்

வீட்டுல் அணியும் உடைகள் பெண்கள் வீட்டில் இருக்கும் போது உடை அணியும் விஷயத்தில் அக்கறை செலுத்த வேண்டியது இல்லை என சில பெண்கள் நினைக்கிறார்கள். இது தவறான மனோபாவமாகும். வீட்டில் இருப்பவர்கள் நம்மை சார்ந்தவர்களாகவே இருப்பினும் வீட்டுச் சுழ்நிலைக்கு ஏற்ப உடை அணிவது வீட்டில் உள்ள ஆண்களுக்கு நிறைவாக இருக்கும். வீட்டில் இருக்கும் போது பகட்டாக உடை அணிவது தேவையில்லை என்றாலும் வீட்டிற்கு ஏற்ற மாதிரி பாந்தமாக உடை அணிவது அவசியமே.

அதிக உடையும் குறைந்த உடையும்

பெண்கள் பொதி சுமப்பது போல உடல் முழுவதும் சுற்றிய நிலையில் அதிகமான அளவில் உடை அணிவது அழகைக் கெடுக்கும். அதற்காக அங்கங்கள் தெரியும் அளவுக்கு மிகவும் குறைவான ஆடைகளை அணியக் கூடாது.

கடைத் தெருவுக்குப் போகும்போது

கடைத்தெரு மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது இலேசான நிறம் அமைந்த புடவைகள் அல்லது மெல்லிய பூக்கள் போட்ட புடவை அணிந்து செல்வது சுழ்நிலைக்கு ஏற்ப பாந்தமாக இருக்க வேண்டும்.

புடவைக்குப் பொருத்தமான சோளிகள்

பெண்கள் அணியக்கூடிய சோளிகளின் கைகளிலும், கழுத்திலும் லேஸ்களை வைத்துத் தைத்துக் கொண்டால் அவை என்ன வண்ணத்தில் புடவை அணிந்தாலும் அதற்கு பொருத்தமாக இருக்கும்.

அலுவலகம் செல்லும் பெண்கள் அணியும் ஆடை

அலுவலங்களுக்கோ, பள்ளி, கல்லூரிகளுக்கோ செல்லும் பெண்கள் மிகவும் பகட்டாகவும் கண்களைப் பறிக்கும் விதத்தில் ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். ஆனால் ஒரேடியாக மோசமான ஆடைகளைத்தான் அணிய வேண்டும் என கருதிவிடக்கூடாது. கண்ணியமான தோற்றத்தை அளிக்கக்கூடிய சுழ்நிலைக்கு ஏற்ற உடையை அணிந்து செல்வது மிகவும் அவசியம்.

ஒல்லியான பெண்களுக்கு உடைகள்

மிகவும் ஒல்லியாக தோற்றமளிக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக் கூடாது. சோளியின் கைகள்கூட மிகவும் பிடிப்பாக இல்லாமல் சற்று தளர்த்தியாக இருப்பது நல்லது.

புடவையின் அமைப்பும் உருவத்தோற்றமும்

பெண்கள் அணியும், அணியக்கூடிய புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கூடிய தன்மையுடன் திகழ்கின்றது. புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது. திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின உருவ அமைப்பே புரட்சிகரமாக மாற்றிவிடக்கூடும்.
உதாரணமாக பெண்கள் அணியக்கூடிய புடவையில் அமைந்த கோடுகள் குறுக்குவாட்டில் அமைந்தால் உயரமான பெண்கள் குள்ளமாக இருப்பது போன்ற பிரமைபார்பவர்களுக்கு தோன்றும். புடவையில் அமைந்த கோடுகள் நேர்வாக்கில் அமைந்தால் குள்ளமானவர்கள் சற்று உயராமாக இருப்பது போல காட்சி தருவார்கள்.

கடற்கரை போன்ற இடங்களுக்கு சென்றால்

கடற்கரை போன்ற பொது இடங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் போது மிகவும் நெருக்கமாக கட்டம் போடப்பட்ட மிகவும் அழுத்தமான சாயம் கொண்ட கைத்தறி சேலைகளை உடுத்திச் சென்றால் பாந்தமாக இருக்கும்.

உங்கள் பிள்ளைகளை பாதுகாக்க/ கண்காணிக்க ஒரு இலவச ஆப்ஸ்

உங்கள் பிள்ளைகளை பாதுகாக்க/ கண்காணிக்க ஒரு இலவச ஆப்ஸ்
இது தான் இந்த வார ஹாட் டாபிக். பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு வீட்டில் மடியில் நெருப்பு கட்டி கொண்டுதான் பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்களின் கவலையை போக்க பி ஸேஃப் என்னும்
புது வகை ஆப்பை ஆன்ட்ராயிட் / ஆப்பிள் பிளாட்பாரத்தில் இலவசமாக
தரவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்கள் பிள்ளைகளின்
மொபைல் ஃபோனில் இதை இன்ஸ்டால் செய்து விட்டால் – கொஞ்சம் கவலை இல்லாமல் இருக்கலாம்.

இதன் மூலம் உங்களின் பிள்ளைகளை நீங்கள் துல்லியமாக கண்காணிக்க
முடியும். அவர்கள் எங்கு இருக்கின்றனர் எங்கு செல்கின்றனர் – ஏதாவது ஒரு இடத்தில் அதிக நேரம் நடமாட்டம் இல்லாமல் இருக்கிறார்களா என்று வீட்டின் கணனியில் நீங்கள்அவர்கள் இருக்கும் ஊர் – தெரு – கதவிலக்கம்
முதற்க்கொண்டு பார்க்க முடியும்.

அது போக இந்த ஆப்ஸை இன்ஸ்டால் செய்திருக்கும் பிள்ளைகள் தங்களுக்கு ஏதாவாது விபரீதம்ஏற்படுகிறது என உணர்ந்தால் இதில் உள்ள கார்டியன்
அலர்ட் – “Guardian Alert” என்ற பொத்தானை அழுத்தினால் உங்களுக்கு அவர்கள்
ஆபத்தில் உள்ளார்கள் என இலவசமாக தகவல் வரும்.இந்த அலெர்ட் வசதி பெற்றோர் அல்லது பல நண்பர்களுக்கு கூட ஒரே நேரத்தில் தெரிவிக்க
இயலும். சில சமயம் நீங்கள் ஒரு இடத்தில் மாட்டிகொண்டீர்கள் அல்லது அங்கிருந்து யாரும் சந்தேகபடாமல் தப்பிக்கவும் இதில் இன்னொரு வசதி உண்டு அது தான் ஃபேக் கால் – “Fake Call” – மொபைலை நோண்டுவது போல் இந்த பட்டனை அழுத்தினால் உங்க ஃபோனுக்கு சிக்னல் இல்லைனா கூட கால் வரும் – உடனே நீங்களும் உங்களுக்கு கால் வந்திருக்கிறது – எக்ஸ்கியூஸ் மீன்னு எஸ் ஆகிடலாம் – இது பிள்ளைகள் மற்றும்
தனியே வேலைக்கு செல்லும் பெண்கள், இரவில் பணிபுரியும் பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிசாதாமக அமையும்.

உடனே தயக்கம் என்ன – மொபைல் இல்லாத வளர்ந்த பிள்ளைகளே இல்லை என்னும் இந்த காலத்தில் இந்த வசதியை இலவசமாய் செய்து கொடுங்கள்
உங்களின் பிள்ளைகளின் கவலையை அடியோடு மற்ந்து விடுங்கள்.

இதன் மூலம் உங்கள் பிள்ளைகளின் ந்டவடிக்கையை கூட
நீங்கள் கண்கானிக்க முடியும். இது பல மாணவ / மாணைகளின் தவறான பாதைக்கு செல்வதை தடுக்க முடியும். என்ன மகிழ்ச்சி தானே பெற்றோர்களே!?

Apple Patrons FREE Download Link - https://itunes.apple.com/in/app/bsafe-personal-safety-app/id459709106?mt=8

Android Achubichus FREE Download Link - https://play.google.com/store/apps/details?id=com.bipper.app.bsafe&hl=en
#sanjana chayya

செவ்வாய், 13 ஜனவரி, 2015

கரண்டி ஆம்லெட்

வழக்கமான ஆம்லெட் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும் முட்டைப் பிரியர்களுக்கு இது நல்ல மாற்று. செய்வது சுலபம், சுவையோ அதிகம்.

என்னென்ன தேவை?

முட்டை-1

சின்ன வெங்காயம் - கைப்பிடி

கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகுத் தூள் - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் ஒரு குழிக் கரண்டியில் சிறிதளவு எண்ணெய் தடவி அதில், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.

பிறகு மிளகுத் தூள் தூவி, கலக்கி வைத்திருக்கும் முட்டையை ஊற்றவும். சிறிது நேரத்தில் திருப்பிப் போட்டு எடுக்கவும். ஓட்டல்களில் ஒவ்வொருவருக்கும் இதுபோன்று செய்துகொடுக்க நேரமாகும் என்பதால், தற்போது தோசைக் கல்லிலேயே குழிகள் அமைக்கப்பட்டு அதிலேயே கரண்டி ஆம்லெட் சுடச்சுடத் தயார் செய்யப்படுகிறது.

ஸ்பெஷல் வடை


ஸ்பெஷல் வடை என்னென்ன தேவை?

துவரம் பருப்பு 2 கப்

கடலை பருப்பு 1 கப்

உளுத்தம் பருப்பு முக்கால் கப்

பச்சரிசி 50 கிராம்

முந்திரி பருப்பு 25

தேங்காய்த் துருவல் (அரை மூடியில் வருவது)

காய்ந்த மிளகாய் 4 அல்லது 5

கறிவேப்பிலை சிறிது

பெருங்காயத் தூள் சிறிது

உப்பு சுவைக்கேற்ப

எண்ணெய் வடை பொரிப்பதற்கு

எப்படிச் செய்வது?

து.பருப்பு, க.பருப்பு, உ.பருப்பு, அரிசி, மு.பருப்பு, மிளகாய் ஆகியவற்றைக் கழுவி இரண்டரை மணிநேரம் நீரில் ஊறவைக்கவும். அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்து இறக்கிவைத்துத் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து வடையாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

திங்கள், 12 ஜனவரி, 2015

வீட்டிலேயே செய்யும் பேஸ்மாஸ்க்

பாதாம் மாஸ்க்:

மிகவும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பாதாம் மாஸ்க் மிகவும் நல்லது. 8 பாதாம் பருப்புக்களை வெதுவெதுப்பான நீரில் முந்தைய நாள் இரவே ஊற வைக்கவும். பின்னர் மறுநாள் காலை அரைத்து ஒரு ஸ்பூன் பாலோடு குளிப்பதற்கு முன் முகத்தில் தடவி சிறிது நேரம் மாசாஜ் செய்தால் முகம் பளபளப்பாகும். மேலும் கரும்புள்ளிகள் மறையும்.

ஈஸ்ட் மாஸ்க்:

பொடி செய்யப்பட்ட ஈஸ்ட் மாத்திரை 1/2 ஸ்பூன், (மருந்து கடைகளில் கிடைக்கும்). 1 ஸ்பூன் பொடி செய்யப்பட்ட ஓட்ஸ், 2 ஸ்பூன் தயிர் ஆகியவை கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள கருமை மறைந்து சருமம் புத்துணர்ச்சி பெருகும்.

வாழைப்பழ மாஸ்க்:

வாழைப்பழத்துடன் ஒரு முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து நன்கு கூழ் போல் குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் மென்மையாகும்.

பச்சை கொத்தமல்லி மாஸ்க்:

கொத்தமல்லியை அரைத்து அதன் விழுதை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் புத்துணர்ச்சி பெருகி அழகு பெரும்.

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

ஹோம் கார்டன் மணமூட்டிகள்

ஹோம் கார்டன்

உலக மயம், தாராள மயம் என நமது பொருளாதாரம் மாறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், நமது உணவுப் பழக்கமும் உலக மயம் ஆகியிருப்பதில் வியப்பில்லை. சுவையின் காரணமாக துரித உணவுகள் (Fast Food)  நிறைந்திருப்பதை நாம் காணலாம். அவற்றில் அதிகம் பயன்படும் சில மருத்துவ குணமுடைய ஐரோப்பிய மணமூட்டிகள் பற்றி இங்கு விளக்குகிறார் தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட். இவற்றை பச்சையாகவும் உலர வைத்து பதப்படுத்தியும் எண்ணெயாகவும் பயன்படுத்தலாம் என்பது இன்னொரு சிறப்பு. இந்தியாவில் பெரும்பாலும் மலைப்பாங்கான பகுதிகளில் இவை விளைவிக்கப்படுவதாலும் பதப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாலும் விலை சற்று அதிகம். அதோடு, எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. நமது தேவைக்கு வீட்டுத் தோட்டத்தில் சில செடிகளை நாமே வளர்க்கலாமே!

தைரியம் தரும் தைம்

தொட்டியில் வளர்ப்பதற்கு சிறந்த தாவரம். மிகச்சிறிய இலைகளையும் மெல்லிய தண்டு அமைப்பையும் கொண்ட பழமையான மணமுள்ள தாவரம். மலைப்பாங்கான பகுதிகளிலும் சமவெளிப் பகுதிகளிலும் வளரக்கூடியது. இருப்பினும் மலைப் பகுதிகளில் வளர்பவையே சிறப்பாக உள்ளன. நல்ல வடிகால் வசதி தேவை. விதை, நுனித்தண்டு, மண்பதியம் அல்லது தாய்ச்செடியிலிருந்து வேருடன் பிரித்து இனப்பெருக்கம் செய்யலாம். சளி, இருமல் போன்ற உபாதைகளுக்கு இதன் வடிநீர் (Decoction ) சிறந்தது. வாய் கொப்புளிக்க (Mouth Wash ) உதவும் திரவங்களில் பெரும்பங்கு தைம் எண்ணெயில் செய்யப்படுபவையே. கிரேக்கர், ரோமானியர் காலத்தில் படைத் தலைவர்களுக்கும் வீரர்களுக்கும் தைரியம் ஊட்ட, பெண்கள் அவர்களுக்கு இதை வழங்கியதாக வரலாறு உண்டு. எகிப்தியர் தங்கள் ஃபரோ மன்னர்களின் உடல்களை பாடம் (Embalming) செய்து பாதுகாக்க இதனை உபயோகித்துள்ளனர்.

எதிர்ப்பு சக்தி தரும் ரோஸ்மேரி

பொதுவாக இது 900 மீட்டர் உயரத்துக்கு மேலுள்ள பகுதிகளில் நன்கு வளரும் தன்மையுள்ளது. தொட்டிகளிலும் வளர்க்கலாம். மத்தியதரை கடல் நாடுகளை தாயகமாகக் கொண்டது. பல்லாண்டுப் பயிர். வறட்சியை தாங்கி வளரும் தன்மையுள்ளது. தண்ணீர் தேங்குதல் கூடாது. நோய்த் தாக்குதல் குறைவு. விரைவான நாற்று உற்பத்திக்கு நுனித்தண்டை உபயோகிக்கலாம். வேர் வளர்ச்சி சற்று கடினம் என்பதால் வளர்ச்சி ஊக்கிகள் தருவது நல்லது. பிரபல உணவகங்களில் அசைவ உணவை தயாரிக்கும் போது இதன் பச்சை இலைகளை பயன்படுத்துவர். இதனால் மணமும் சுவையும் கூடுகிறது. நிழலில் உலர்த்திப் பெறப்படும் இலைகள் தேநீர் தயாரிப்பதில் நல்ல மணமூட்டியாக உள்ளதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கின்றன. வயிற்று வலி, அஜீரணம் போன்ற உபாதைகளுக்கும் நல்ல மருந்தாகும். இது மூலிகை வாசனை சிகிச்சையிலும் (Aroma Therapy) பயன்படுகிறது. இதிலிருந்து பெறப்படும் நறுமண எண்ணெயை உயர் வகை வாசனை திரவியங்களிலும் முக அலங்கார பொருட்களிலும் தலைமுடி தைலம் தயாரிப்பிலும் பெண்கள் அழகு நிலையங்களில் அழகு ஊட்டவும் பயன்படுத்துகின்றனர். இது குறிப்பாக பெண்களுக்கான தாவரம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மேம்படுத்தப்பட்ட வகை ஊட்டி 1 (RM 1) நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பதோடு வணிக ரீதியில் அதிக மகசூலையும் தருகிறது. வளர்ப்பு மிருகங்கள் இதனை உண்பதில்லை என்பது வணிக ரீதியாக பயிர் செய்பவர்களுக்கு நல்ல செய்தி!

சனி, 10 ஜனவரி, 2015

ஆரோக்கியமான ஐஸ்க்ரீம்

கொளுத்துகிற கோடையில் ஜில்லென ஐஸ்க்ரீம் சாப்பிடுவது சுகமான அனுபவம் என்றால் கொட்டுகிற மழையில் குளிரக் குளிர ஐஸ்க்ரீம் ருசிப்பது  அதைவிட அருமையான அனுபவம்.கடைகளில் வாங்கி சாப்பிடுகிற ஐஸ்க்ரீம் வகைகளில் செயற்கையான எசென்ஸும், கலரும், சுவையும்  சேர்க்கப்படுவதால் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமில்லை. ‘‘வீட்லேயே விதம் விதமான பழங்களைக் கொண்டு ஐஸ்க்ரீம் செய்யறது மூலமா  ஆரோக்கியத்தையும் காப்பாத்தலாம்... பழங்கள் சாப்பிடற பழக்கத்தையும் உருவாக்கலாம்’’ என்கிறார் ஹேமலதா!

‘‘எம்.பி.ஏ. முடிச்சிருக்கேன். ஆரோக்கியமான சாப்பாடு பத்தின அக்கறை காலேஜ் படிக்கிற போதே உண்டு. பேக்கரி அயிட்டங்களை கூட வீட்லயே  ஆரோக்கியமா எப்படிச் செய்யறதுனு யோசிச்சுப் பண்ணுவேன். அப்படித்தான் ஐஸ்க்ரீம் செய்யக் கத்துக்கிட்டேன். எசென்ஸ் உபயோகிச்சுப் பண்றதுக்குப்  பதிலா பழங்களையே வச்சு ட்ரை பண்ணினேன். ஸ்ட்ராபெர்ரி, மேங்கோ, பனானானு எல்லாப் பழங்களையும் வச்சு ஐஸ்க்ரீம் பண்ணலாம். குல்ஃபியும்  பண்றேன். பிளெயின், கேசர் - பாதாம், மேங்கோ, சாக்லெட், மலாய்னு அஞ்சு ஃபிளேவர்ல குல்ஃபி பண்றேன்.

இது தவிர, சமீப காலமா சிறுதானியங்களைப் பத்தின விழிப்புணர்வு அதிகமாயிட்டு வர்றதால, அதை வச்சும் ஐஸ்க்ரீம் பண்ணினா என்னனு யோசிச்சு  ட்ரை பண்ணினேன். சர்க்கரைக்குப் பதில் வெல்லம், பாலுக்கு பதில் தேங்காய்ப் பால், கோவா, கார்ன்ஃப்ளாருக்கு பதில் பனிவரகு, திணை மாவு வச்சு  செய்து பார்த்ததுல சூப்பரா வந்தது. ஐஸ்க்ரீம் சாப்பிட்டா உடம்புக்கு ஆகாதுங்கிறதை மாத்தி, அதையுமே ஒரு ஆரோக்கிய உணவா கொடுக்கிறதுதான்  என் நோக்கம்’’ என்கிற ஹேமலதா, 2 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஐஸ்க்ரீம் பிசினஸில் இறங்க நம்பிக்கை தருகிறார்.

‘‘பால், பழங்கள், ஃப்ரெஷ் க்ரீம், சிறுதானியங்கள், எலெக்ட்ரிக் பிளென்டர், மோல்டுனு எல்லாத்துக்கும் சேர்த்தே அந்த முதலீடு போதும். எலெக்ட்ரிக்  பிளென்டர் 1,750 ரூபாய்க்குக் கிடைக்கும். கையாலயே ஐஸ்க்ரீம் கலவையைக் கலக்கலாம். பிளென்டர் உபயோகிச்சா இன்னும் அதிக சாஃப்டா வரும்.  அதே பிளென்டரை கேக் தயாரிக்க, மாவு கரைக்கவெல்லாம் கூட உபயோகிக்கலாம். வெனிலா, பட்டர் ஸ்காட்ச் வகைகளை 500 மி.லி. 50 முதல் 75 ரூபாய்க்கும், குல்ஃபி வெரைட்டியை அளவு மற்றும் ஃபிளேவரை பொறுத்து 10  ரூபாய்லேருந்தும் விற்கலாம்.

50 சதவிகித லாபம் நிச்சயம். வெயில் காலத்துல விற்பனை அதிகமா இருக்கும். மற்ற நாட்கள்லயும் விசேஷங்களுக்கு ஆர்டர் எடுக்கிறது மூலமா  லாபம் பார்க்கலாம்...’’ என்கிறவரிடம் ஒரே நாள் பயிற்சியில் 5 வகையான ஐஸ்க்ரீம் மற்றும் 4 வித குல்ஃபி செய்யக் கற்றுக் கொள்ளக் கட்டணம்  750 ரூபாய். (95001 48840)