Blogger இயக்குவது.

வியாழன், 23 டிசம்பர், 2010

ரகசிய கேமராக்கள்: பெண்களே ‍எச்சரிக்கை!

கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு
செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக
சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாகஇருக்கிறது. அறிவியல் புதிய
கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்லபயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை
எத்தனை பேர்நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்குபெண்களுக்கு எதிராக
எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் படுகிறதுஎன்பதை இக்கட்டுரையில் காண்போம்.

குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள்வெளிநாடுகளில் இருக்க தனியாக
வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக்
கூடிய நிலையில் உள்ள சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவே,
பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின்
நோக்கமாகும்.

பொது இடங்களில் காமிராக்கள் :

பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட்
போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து
இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி
வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை
இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஹிஜாப் அணியும் பெண்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும். பர்தா அணியாமல்
வெளியே செல்லும் பெண்கள் இது பற்றியவிழிப்புணர்வு பெற்றுக் கொண்டு தங்கள்
ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.

பள்ளி, கல்லூரி, விடுதிகளில் :

பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும்
கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில்
கவனம்செலுத்தவும். சக மாணவர்கள் தங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன்
பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. கவனமாக எப்பவும்
விழிப்புணர்வுடன் இருக்கவும்.

பொதுக்கழிப்பிடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள் :

பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும்
பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு
ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும்
போதும், கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப்
பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல்
தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப்
பட்டிருக்கலாம் கவனம் தேவை.

மருத்துவமனைகள் (ஆஸ்பத்திரிகளில்) கவனம் தேவை :

மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன்
செல்வது நல்லது. மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை
மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள். காமிராக்கள்
எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து
கொள்ளுங்கள், மருத்துவமனைகளில்
டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை
உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப்
பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின்
கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து,
வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில்
பணம் சம்பாதித்தான். இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல
புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க
முடியவில்லை.

ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்கதுணையுடனும் சென்று அங்கு
மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்குபொருத்தப்பட்டிருக்கும்
கண்ணாடிகளும் :

நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப் போட்டு பார்த்து
சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த
துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும்பெண்கள் மிக
மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை
கண்காணிக்ப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும்
துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு
கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை
மாற்றவும். காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள்
பொருத்தப்பட்டிருக்கும்.

இந்தகண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு

இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே
பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை
பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம்
பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை
கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை
மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள்
பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில்
கொண்டு செயல்படவும்.

நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன்
இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம்
நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கு காரணம் கையடக்க ரகசிய காமிராக்கள்தான்
என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில் சிக்காமல் வாழ பழகிக்
கொள்ளவும் தக்க விழிப்புணர்வை நம் சமுதாயப் பெண்களுக்கும் சொல்லி நம்
எல்லோரிடமும் ஒருஎச்சரிக்கை உணர்வை எப்பவும் ஏற்படுத்த வேண்டும்.
ஈமெயிலில் வந்தது

செவ்வாய், 21 டிசம்பர், 2010

சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.


1. அநாதையைப் பொறுப்பேற்றல்:
"அநாதையைப் பொறுப்பேற்றவரும், நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்" (புஹாரி).

2. கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதி வருதல்:
"எவர் கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸியை'ஓதி வருவாரோ மரணத்தைத் தவிர அவருக்கு சுவர்க்கம் நுழைய எதுவும் தடையாக இருக்காது" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நஸாஈ).

ஆயத்துல் குர்ஸி:

"அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம" (பகரா 2:255).
اللَّهُ لا إِلَهَ إِلا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لا تَأْخُذُهُ سِنَةٌ وَلا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأرْضَ وَلا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன்.

3. வுழூச் செய்த பின் ஓதவேண்டியவை:
'உங்களில் ஒருவர் அழகான முறையில் வுழூச் செய்து பின்பு:
أشهد أن لا اله الاالله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله
'அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு' (வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு எந்த இணையுமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரென்றும் தூதரென்றும் சான்று பகருகிறேன்) என்று சொல்வாரானால் அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படுகின்றன. அவர் விரும்பிய வாயிலால் நுழைய முடியும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

4. அஸர் தொழுகையையும் சுபஹ் தொழுகையையும் தொடர்ச்சியாக தொழுது வருதல்:
'எவர் அஸர் தொழுகையையும், சுபஹ் தொழுகையையும் (பேணிப் பாதுகாத்து) தொழுது வருவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

5. ஐவேளை தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருதல்:
"எவர் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருவாரோ அல்லாஹ்விடத்தில் அவரை சுவர்க்கத்தில் நுழைவிக்கும் ஓர் உடன்படிக்கை இருக்கிறது" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத், நஸாஈ).

6. ஸலாத்தை பரப்புதல்:
"உங்களில் எவரும் நம்பிக்கை கொள்ளாத வரை, சுவர்க்கம் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை விசுவாசம் கொண்டவராகக் கருதப்பட மாட்டீர். உங்களுக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தும் ஒரு காரியத்தை சொல்லித் தரட்டுமா? உங்களுக்கு மத்தியில் ஸலாத்தை அதிகமாகப் பரப்புங்கள்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

7. வுழூச் செய்த பின் இரண்டு ரக்அத் மனப்பூர்வமாகத் தொழுதல்:
'ஒரு முஸ்லிம் அழகான முறையில் வுழூச் செய்து உளப் பூர்வமாக இரண்டு ரக்அத் தொழுவாரானால் அவருக்கு சுவர்க்கம் கடமையாகி விட்டது' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

8. கல்வியைத் தேடல்:
"எவர் கல்வியைத் தேடி வெளியேறிச் செல்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தின் பாதையை இலகு படுத்துகிறான்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

9. பெற்றோருக்கு நன்மை செய்தல்:
அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும், பின்பு அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும், பின்பு அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும். இறைத் தூதரிடம் அவர் யார் எனக் கேட்கப்பட்டது? "பெற்றோர்களின் இருவரையோ அவர்களின் ஒருவரையோ முதிய வயதில் அடைந்து, பின்பு அவன் (அவர்கள் மூலம்) சுவர்க்கம் நுழையவில்லையானால் அவனேயாவான்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

10. நாவையும், மர்மப் பகுதியையும் பேணுதல்:
"எவர் இரு தாடைகளுக்கும், தொடைகளுக்கும் மத்தியில் உள்ளதை பாதுகாக்கிறேன் என பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு நான் சுவர்க்கத்தை பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

11. முஅத்தீனின் அழைப்புக்கு மறுமொழி பகருதல்:
"முஅத்தீன் (அழைப்பாளர்) பாங்கு சொல்லும் போது அதை செவிமடுப்பவர் அதே போன்று சொல்ல் வேண்டும், 'ஹய்யஅலஸ் ஸலாஹ், ஹய்யஅலல் பலாஹ்' என்று சொல்லும் போது மாத்திரம் 'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி' என்று சொல்ல வேண்டும், பின்பு முஅத்தீன் 'லா இலாஹ இல்லல்லாஹ்'என்று சொல்லும் போது யார் தூய உள்ளத்துடன் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று பதில் சொல்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

12. ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுது வருதல்:
"எவர் ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுது வருவாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகிறான். அவைகளாவன: லுஹருக்கு முன் 4ரக்அத்துகள், லுஹருக்குப் பின் 2 ரக்அத்துகள், மஃரிபுக்குப் பின் 2ரக்அத்துகள், இஷாவுக்குப்பின் 2 ரக்அத்துகள், பஜ்ருக்கு முன் 2ரக்அத்துகள்". (திர்மிதி)

13. அல்லாஹ்வின் 99 திருநாமங்களை மனனமிட்டு அதன்படி செயல்படுதல்:
"அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் உள்ளன. எவர் அவைகளை மனனமிட்டு அதன்படி செயல்படுவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்துவிட்டார்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

14. நான்கு விடயங்கள் ஒரு சேர பெற்று விட்டவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்:
"உங்களில் இன்று நோன்பு நோற்றவர் யார்? என நபி (ஸல்) அவர்கள் குழுமியிருந்த தனது தோழர்களிடம் வினவினார். அபூபக்ர் (ரலி) அவர்கள் அதற்கு நான் என்றார்கள். இன்று உங்களில் நோயாளியை சுகம் விசாரிக்க சென்றது யார்? என அன்னார் வினவினார், அதற்கும் நான் என அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இன்று உங்களில் ஜனாஸாவில் கலந்து கொண்டவர் யார்? என அன்னார் கேட்டபோது, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். இன்று உங்களில் ஏழைகளுக்கு உணவளித்தவர் யார்? என அன்னார் கேட்டார், அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். எவருக்கு மேற் கூறப்பட்ட இவ்விடயங்கள் ஒரே நாளில் ஒரு சேர கிடைத்துவிடுமோ அவர் சுவர்க்கத்தில் நுழைந்து விடுவார்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

15. இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்:
"முஆதே! எவர் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காத நிலையில் மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

16."லா இலாஹ இல்லல்லாஹ்" வை உளத்தூய்மையுடன் மொழிதல்:
"எவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை என்பதை உளத்தூய்மையுடன் சொல்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

17. எழுபதாயிரம் பேர் கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் நுழைவர்:
"நபி (ஸல்) அவர்கள்: எனது சமுதாயத்தில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையும், தண்டனையுமின்றி சுவர்க்கம் நுழைவார்கள் எனக் கூறிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள். அங்கிருந்தோர் தங்களுக்குள் அந்த எழுபதாயிரம் பேர் நபியோடு தோழமை கொண்டு இருந்தவர்கள், மற்றும் சிலர் இல்லை அவர்கள் இஸ்லாத்தில் பிறந்து அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காதவர்கள். வீட்டைவிட்டு வெளியில் வந்த நபி (ஸல்) அவர்கள் நீங்கள் எதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தீர்கள் எனக் கேட்க நடந்தவைகளைக் கூறினர். நபி (ஸல்) அவர்கள் அந்த எழுபதாயிரம் பேர்:

மந்திரித்துப் பார்க்காதவர்கள், மந்திரித்துப் பார்க்குமாறு கோராதவர்கள், பறவை சாஸ்த்திரம் பார்க்காதவர்கள் முழுமையாக அல்லாஹ்வையே சார்ந்திருக்கக் கூடியவர்கள் எனக் கூறினார்கள். அங்கிருந்த ஒருவர் எழுந்து நபியே நானும் அவர்களுடன் இருக்க பிரார்த்தியுங்கள், நீரும் அவர்களுடன் இருப்பீர் எனக் கூறினார்கள். மற்றொருவர் எழுந்து தனக்கும் பிரார்த்திக்குமாறு வேண்டினார், அதற்கு நபியவர்கள் "உக்காஷா"உம்மை முந்திவிட்டார் எனக்கூறினார்கள். (முஸ்லிம்).

"நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன. அதிலே நிரந்தரமாக இருப்பார்கள். அங்கிருந்து இடம் பெயர்வதை விரும்ப மாட்டார்கள்" (குர்ஆன் 8:107,108).



.

__
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!

புதன், 24 நவம்பர், 2010

“இஸ்லாமிய திருமணம்” என்ற அந்தஸ்த்தை பெரும் திருமணம்

தவிர்க்கப்பட வேண்டிய இஸ்லாத்திற்கு புறம்பானவை

  1. மணமக்களை பூமாலை மலர்களால் அலங்கரித்து அழைத்து வரல்.
  2. திருமணத்திற்கு முந்திய நாளிரவு மணமக்களுக்கு மருதாணி இடுதல், நலங்கிடல் என்ற பெயரில் சடங்கு செய்தல்.
  3. கைக்கூலி எனும் வரதட்சணை வாங்குதல்.
  4. மாலை மாற்றுதல், வெற்றிலை மாற்றுதல், அரிசி அளத்தல், பல்லாங்குழி விளையாடல் போன்றவை.
  5. மணமேடைக்கு மணமகன் வருகையில் ஆரத்தி எடுத்தல்,
  6. ஆட்டுத்தலை, கோழி போன்றவற்றை தலை சுற்றி எறிதல்.
  7. மணமகனுக்கு பெண் வீட்டார் நிறைகுட தண்ணீர்வைத்து அதில் அவரின் காலை கழுவி விடல்.
  8. மணமகனுக்கு தங்க மோதிரம், மைனர் செயின் அணிவித்தல்.
  9. மணமகளுக்கு தாலி மற்றும் கருகமணி கட்டுதல்.
  10. மணமக்களை வைத்து மஞ்சள் பூசி நலங்கு பாடுதல்.
  11. நல்லநேரம், சகுணம் பார்ப்பது, சடங்குகளின் பெயர்களால் வரம்புமீறி, ஆண், பெண் (திரை) ஹிஜாபின்றி இஸ்லாம் அனுமதிக்காத விதத்தில் விளையாடி மகிழ்வது.
  12. மேடை அலங்காரம், மேளவாத்தியம் என்று அனாச்சாரமாக பணத்தை செலவழிப்பது.பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின்பல சந்தர்ப்பங்களில் சீர்வரிசை என்ற பெயரில் பொருட்களை கேட்டு வாங்குவது.
  13. சுன்னத்தான தாடியை முகச்சவரம் என்ற பெயரில் வழித்தல்.
  14. திருமணதன்று பெண் வீட்டாரிடம் விருந்து கொடுக்க நிர்பந்திப்பது.
  15. மணமக்களை தர்ஹாகளுக்கு அழைத்து செல்வது.
இந்த சடங்குகள் அனைத்தையும் விட்டு விடுபட்டு செய்யப்படும் திருமணங்களே இஸ்லாமிய திருமணம் என்ற அந்தஸ்தைப் பெரும்.

இஸ்லாத்திற்கு மாற்றமாக இது மாதிரியான திருமணங்களை புறக்கணித்து சமுதயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

செவ்வாய், 16 நவம்பர், 2010

Holy Kaaba gets new kiswa


MAKKAH: The Holy Kaaba in Makkah was given a new kiswa, or covering, on Monday morning, a tradition that takes place on Dul Hijjah 9 every year.

Officials from the Presidency of the Two Holy Mosques Affairs took down the old kiswa and replaced it with a new one, which is made from pure silk at Makkah’s Kiswa Factory.

The ceremony was attended by representatives from the Presidency of the Affairs of the Two Holy Mosques and the Kiswa Factory. The changing of the kiswa is done in a particular way with the new kiswa hung over the old one from the top and then the old one removed from underneath.

The Kiswa Factory was built in Makkah about 74 years ago by the Kingdom’s founder King Abdul Aziz. A new kiswa is made every year by Saudis who work at the factory.

The black kiswa is made with 670 kg of pure silk, and 150 kg of gold and silver thread that is used for sewing the Qur’anic verses. It is 658 square meters in size and consists of 47 pieces, each 14 meters long and 95 cm wide. It costs about SR16.8 million ($4.5 million).